பனையூரில் ரசிகர்களை சந்திக்க மாஸாக வந்து இறங்கிய தளபதி விஜய்…. என்னது! அவர் அணிந்த சட்டையின் விலை மட்டும் இத்தனை ஆயிரமா?….

பனையூரில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க வந்த விஜய் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் விலை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தனது ரசிகர்களால் ‘இளைய தளபதி’ என அன்போடு அழைக்கப்படுகிறார். தற்பொழுது நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அண்மையில் இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

   

எனினும் இப்பாடல் ‘மொச்ச கொட்ட பல்லழகி ‘பாட்டின் டப்பிங் எனவும் கூறி விமர்சனம் செய்யவும் பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அத்துடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

 

இந்நிகழ்ச்சிக்கு இனோவா கிரிஷ்டா காரில் மாஸாக வந்து இறங்கியுள்ளார் நடிகர் விஜய். இந்நிகழ்ச்சிக்காக அவர் வெள்ளை சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தார். செம ஸ்டைல் ஆகவும் அதேசமயம் மிக எளிமையாகவும் இருந்த நடிகர் விஜயின் சட்டையின் விலை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த சட்டையின் விலை 32 ஆயிரத்து 790 ரூபாய் என்று கூறப்படுகிறது. ஒரு சட்டையின் விலை இவ்வளவா என வாயைப் பிளக்காதீங்க. மேலும் இந்த பிராண்டின் லோகோ தெளிவாக தெரியும் வகையில் சட்டையில் பிரிண்ட் செய்யப்பட்டும் இருந்தது. இதை பார்க்கும் பொழுது நடிகர்கள் எவ்வளவு செல்வ செழிப்புடன் இருக்கின்றனர் என்பது நமக்கு தெள்ள  தெளிவாக தெரிகின்றது.