பருத்திவீரன் திரைப்படத்தில் டீ கடை ஓனர் கதாபாத்திரத்தில் நடித்தவர் , அதன்பின் ஏன் எந்த படங்களும் நடிக்கவில்லை என்று தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கார்த்தி , இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி தற்போது பல படங்களை கைவசமும் வைத்துள்ளார் , இவர் நடித்து பெரிய அளவில் வெற்றியடைந்த திரைப்படம் பருத்திவீரன் ,இந்த திரைப்படம் பிறகு இந்த படத்தில் நடித்த வாழ்க்கையும் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,

   

இந்த திரைப்படத்தில் நடித்த கார்த்தி ,தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது ,இதில் நடிகையாக நடித்த ப்ரியாமணி ஒரு முழு செலிபிரிட்டியாக மாறியுள்ளார் ,துணை கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் ,கஞ்சா கருப்பு ஆகியோர் மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றனர் ,இதன் மூலம் பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தது ,

அதில் பெரிதாக ஜொலிக்காத இவர்கள் தற்போது கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் ,இந்த திரைப்படத்தில் டீ கடை சொந்தக்காராக நடித்த ஆறுமுகம் என்பவர் உண்மையிலே அவருடைய கடைத்தானாம் ,இந்த படத்திற்காக அவரை பயன்படுத்திவிட்டு டப்பிங் பணிகள் முடிந்தவுடன் தூக்கி எரிந்து விட்டார்களாம் ,கோவையில் இருந்து மதுரை செல்வதற்கு வெறும் 200 மட்டும் கொடுத்து துரத்திவிட்டார்களாம் .,