பறையாட்டத்தில் பட்டையை கிளப்பிய பெண்கள்…. என்ன குத்து குத்துறாங்க?…. செம வைரலாகும் வீடியோ….!!!

பெண்கள் பறையாட்டம் வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. மனிதர்கள் வளர வளர அதாவது அடுத்த காலகட்டத்தை நோக்கி செல்லும்போது அறிவியல் வளர்ச்சி, நாகரிகம் , பண்பாடு போன்றவற்றின் மாற்றத்தினால் பல பழக்கவழக்கங்கள் மாறுபட்டு வருகின்றது. அந்த காலத்தில் இருந்த எந்த பழக்க வழக்கங்களும் நாகரீகம் போன்றவை தற்போது இல்லை என்றுதான் கூற வேண்டும்.

   

அதிலும் நம் தமிழர்களின் பாரம்பரிய கலையான பலவும் தற்போது அழிந்து கொண்டே வருகின்றது. எடுத்துக்காட்டாக பறையாட்டம், தப்பாட்டம், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை எல்லாம் காலம் செல்ல செல்ல அழிந்து கொண்டே வருகின்றது. அதனை தலைமுறை தலைமுறையாக செய்து கொண்டு வருபவர்களும் அழிந்து கொண்டுதான் உள்ளார்கள். இதனை மீட்டெடுப்பது என்பது பலரின் கடமையாகும்.

இதனால் பல இடங்களில் அதாவது கிராம பக்கங்களில் இன்னும் இந்த கலையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பெரும்பாலான இளைஞர்களும் இதனை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பாரம்பரிய கலைகளை அழியாமல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமாகும். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பெண்கள் பறை வாசிப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் முழு எனர்ஜியோடு சற்று கூட சோர்வடையாமல் அவர்கள் நடனம் ஆடுகிறார்கள் . இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…