பாட்டிக்கு இந்த வயதில் இப்படியொரு திறமையா? ஜானகி அம்மா பாடலை அப்படியே பாடி அசத்திய பாட்டி அம்மா.. கேளுங்க நீங்களே சொக்கிப் போயிடுவீங்க…!

சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்த செயல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது. திறமை என்பதை வயதைப் பொறுத்த விசயமே இல்லை. யாருக்குத் திறமை இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்தவகையில் இங்கே ஒரு பாட்டிக்கு செமத்தியாக பாடும் திறமை உள்ளது. அவரது குரல் நம்மை ரொம்பவே வருடுகிறது.

   

குரல் தான் என்று இல்லை. அதை அவர் இந்த வயதிலும் தெளிவாக மறக்காமல் மனப்பாடம் செய்துவைத்துள்ளார். பாட்டி தீவிரமான சிவாஜி கணேசன் ரசிகை. அந்த காலத்தில் தன் கணவரோடு கைகோர்த்து, தியேட்டருக்குப் போய் பார்த்த சிவாஜியின் இருவர் உள்ளம் திரைப்படம் பாட்டியின் மனதோடு பதிந்துவிட்டது.

அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘கண் எதிரே தோன்றினாள்’ என்னும் பாடலை பாட்டிப் பாட, அப்படியே ஜானகியை போல் அழகாக வந்து விழுகிறது வார்த்தைகள். இதோ நீங்களே கேளுங்களேன். வீடியோ இதோ…