பாண்டவர் பூமி திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்பட பாண்டவர் பூமி, இந்த திரைப்படத்தில் நாயகனாக அருண்விஜய் நடித்து இருந்தார், நாயகியாக ஸ்மிதா மல்னாட் நடித்திருந்தார். ஒரு குடும்பத்திற்காக வீடு கட்ட செல்வதும் அங்கு இருக்கும் பெண்ணுடன் நட்பு ரீதியாக காதலில் விழுவது தான் பாண்டவர் பூமி படத்தின் கதை.

   

இந்த திரைப்படத்தில் உள்ள தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் என்ற பாடல் மிகவும் பிரபலமானது, இந்தப் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷ்மிதா அழகான நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

பாண்டவர் பூமியை தொடர்ந்து ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து கன்னட படங்களில் பிஸியாக நடித்து வந்த ஷமிதா நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் சிவசத்தி என்ற தொடரில் நடித்தார். அதில் தன்னுடன் நடித்த பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷமிதா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌவுன ராகம் நாடகத்தில் காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷமிதா.