கண் கலங்கிய தங்கை.. எமோஷனல் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்.. வைரலாகும் வீடியோ..

பிரபல தமிழ் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி வரவேற்பு தான். இந்த தொடர் சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த தொடரின் பெயர் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. மக்களிடத்தில் இந்த தொடருக்கு மிக பெரிய அளவில் ஆதரவு உள்ளது என்று சொல்லலாம்.

   

இந்நிலையில் இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம். 23-வயதான சரவண விக்ரம் தன் கல்லூரி படிப்பை முடித்து குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கண்மணி எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து ரௌத்திரம் பழகு, என் உயிர் நண்பன், பகுத்தறிவு போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனது இயல்பான நடிப்பு மற்று வெகுளியான முக பாவனைகளால் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சரவண விக்ரமிற்கு அழகான தங்கை ஒருவரும் உள்ளார் அவரின் தங்கை பெயர் சூர்யா ,இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,