பானி பூரி ஊட்டிவிட்ட நபர்…. ருசித்து ருசித்து மெய்மறந்து சாப்பிடும் மாடுகள்! இதயத்தை நெகிழ வைத்த காட்சி

வட இந்தியாவின் சிறந்த தெரு சிற்றுண்டிகளில் ஒன்று பானி பூரி.

தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலம், இதனை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் மிஸ் பண்ணுகின்றன என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

   

ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை அனுபவித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு பானி பூரி விற்பனையாளர் பூரிஸை காரமான தண்ணீரில் நிரப்பி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.

அதனை வாங்கிய அந்த வாடிக்கையாளர் பானி பூரிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, அருகில் இருந்த மாடு மற்றும் அதன் கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார்.

அவையும் அதனை ருசித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரது மனதையும் வென்றுள்ளது.