‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்த மணிகண்டனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?… வீடியோ இதோ…

பாய்ஸ் திரைப்படத்தில் குமார் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மணிகண்டனை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று பாய்ஸ். சித்தார்த் , நகுல் ,பரத் ,மணிகண்டன், தமன் மற்றும் ஜெனிலியா போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், பாய்ஸ் திரைப்படம் சற்று பல வகையான விமர்சனங்களை பெற்றது.

   

அதோடு மட்டுமில்லாமல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது. பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த அனைவருமே தமிழ் சினிமாவின் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டனர். நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு ,கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகர்களிள் ஒருவராக மாறிவிட்டார்.

அதேபோல நடிகர் பரத் , நகுல் இருவரும் முன்னணி ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர். தமன் மிகப்பெரிய இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் ஆனால் இவர்களுடன் நடித்த நடிகர் மணிகண்டன் மட்டும் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. பல வருடமாக சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

தற்பொழுது இவருக்கு 41 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்யாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இவருடைய அப்பா இறந்துவிட, அம்மாவின் வருமானத்தை நம்பி இவர் செலவு செய்து கொண்டு வருகிறாராம் .இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘கிச்சா வயசு 16’.

இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிய இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பட வாய்ப்புகள் இன்றி தற்பொழுது இவர் ஆன்மீக பாதையில் சென்று விட்டாராம். மீண்டும் சினிமாவிற்குள் வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு உள்ளாராம் நடிகர் மணிகண்டன். இந்நிலையில் நடிகர் மணிகண்டனை பற்றிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….