பார்ப்பதற்கு அச்சு அசலாய் ரஜினி போலவே இருக்கும் நபர்…. ‘சிவாஜி’ திரைப்படத்தில் எடுக்கப்பட்ட UNSEEN  புகைப்படம் உள்ளே….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ திரைப்படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு டூப்பாக நடித்தவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரது தனித்துவமான நடிப்பு திறமையின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளவர். ரஜினிகாந்த் இவர் நடிப்பில் 2007 இல் வெளிவந்த திரைப்படம் ‘சிவாஜி’. திரைப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார்.

   

இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். நடைமுறைக்கு அப்பாற்பட்ட கதையாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றினார் ரஜினிகாந்த் . அதோடு மட்டும் இல்லாமல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதுவரை எந்த  திரைப்படமும் படைத்திராத வசூல் சாதனையை சிவாஜி திரைப்படம் படைத்தது. தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘சிவாஜி’ திரைப்படத்தில் சண்டை காட்சிக்காக ரஜினிக்கு டூப் போடப்பட்டவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பார்ப்பதற்கு அப்படியே ரஜினியை போலவே உள்ளார் . இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம் இதோ….