குழந்தை ஒன்று தனது அம்மா சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாயை வாங்கி மாஸாக சாப்பிடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் அவர்கள் செய்யும் குறும்புத்தனமான சில விஷயங்கள் நம்மை பலரையும் சிரிக்க வைக்கும். குழந்தைகள் வீட்டில் இருந்தால் மட்டும் போதும் நாம் பல கவலைகளோடு வந்தாலும் அவர்களின் முகத்தை பார்த்தால் அதையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவோம்.
இன்றைய காலகட்டத்தில் இணையம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது. அதற்கு ஏற்றார் போல் மக்களும் வளர்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் ஒரு சில குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக எடுத்து அதனை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு குழந்தை தனது அம்மா மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கிறது. பின்னர் அவரிடம் இருந்து அந்த லாலிபாப் மிட்டாயை புடுங்க முயற்சி செய்கின்றது. புடுங்கி அது ஸ்டைலாக அந்த மிட்டாயை திருப்பித் தனது வாயில் வைப்பதை பார்த்து அந்த தாயே ஆச்சரியப்பட்டு போகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram