குழந்தை ஒன்றுக்கு அவரது தாய் எலுமிச்சை பழத்தை பச்சையாக கொடுக்கிறார். அதை சுவைத்து பார்த்த குழந்தை புளிப்பில் முகத்தை சுளிக்கும் வீடியோவானது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. குழந்தைகள் எது செய்தாலும் அது தனி அழகு தான். அவர்கள் மழலை குரலில் செல்லமாக பேசுவது, நடனம் ஆடுவது, சுட்டித்தனம் செய்வது, கோபித்துக் கொள்வது என அனைத்தும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
இதை பெற்றோர்கள் தற்போதயெல்லாம் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளங்களில் இல்லாத விஷயமே இல்லை. அதிலும் குழந்தைகளின் க்யூட்டான வீடியோக்கள் தான் அதிகம் வலம் வருகின்றது.
அந்த வகையில் ஒரு தாய் வேணுமென்றே எலுமிச்சம் பழத்தை அந்த குழந்தைக்கு தருகிறார். அந்த குழந்தையும் ஏதோ ஒரு தின்பண்டம் என்று எண்ணி அதை வாங்கி வாயில் வைக்கின்றது. ஒரு கடி கடித்த உடன் அதற்கு புளிப்பு தாங்க முடியவில்லை. உடனே அந்த பழத்தை தூக்கிப்போட்டு விட்டு முகத்தை சுழித்துக் கொண்டே துப்புகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram