பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது 40 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை போன்று எந்த ஒரு நிகழ்ச்சி இவ்வளவு பிரபலம் அடைந்ததில்லை. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
அன்பு, சண்டை, காதல், மகிழ்ச்சி, வெறுப்பு என அனைத்தையும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் காட்டுகின்றனர். சென்ற வாரம் ‘பேக்கரி டாஸ்க்’ நடத்தப்பட்டு போட்டியாளர்கள் தங்களுக்கிடையே கடுமையாக போட்டியிட்டு கொண்டனர். அந்த வார இறுதியில் மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் ‘அரண்மனை டாஸ்க்’ பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டு வருகிறது. இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சீரியல் நடிகை ரக்ஷிதா ராஜா, ராணியாக நடித்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் என்பது பிக் பாஸ் வீட்டில் வழக்கமான ஒன்று.
அதுபோல இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், ஜனனி, கதிரவன், தனலட்சுமி, குயின்ஸி, ராபர்ட், ஆயிஷா மற்றும் நிவாஷினி தேர்வாகியுள்ளனர். இதில் அசீம், ஜனனி முதல் இரண்டு இடத்தில் இருக்க ராபர்ட், ஆயிஷா, நிவாஷினி மூன்று பேரும் குறைந்த வாக்குகள் பெற்று இறுதியில் உள்ளனர் .
இவர்கள் மூன்று பேரில் இருந்து நிவாஸினி தான் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று.