மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க அனைவரும் விரும்புவார்கள் ஆனால் அதுவே அவர்களுக்கு பெரும் தொந்தரவாக மாறக்கூடும் என்பதை யாரும் நினைப்பதில்லை. காரணம் பொது இடங்களுக்கு அல்லது தனியாக வெளியே செல்வது என்பது இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொள்கின்றனர். இதற்கு பயந்தே பல பிரபலங்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார் அவர்கள். இவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் பல திறமைகளை உடையவர்.மேலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் இருப்பினும் இவர் எதையும் பெரிதாக பொருட்படுத்தியது இல்லை.
நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் சிங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இவரின் பழைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தல அஜித் அவரின் மனைவி ஷாலினி மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது வினைத்தாண்டி வருவாயா படத்தின் போது எடுக்கப்பட்டது போல் உள்ளது.