நடிகை மாளவிகா மேனன், கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2013 ம் ஆண்டு வெளியான ‘விழா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார் இவர். இப்படத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்த மகேந்திரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
மேலும், நடிகர் விக்ரம் பிரபுவின் “இவன் வேற மாதிரி”, நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் “பிரம்மன்” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். மேலும், மலையாள சினிமாவில் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மாடர்ன் டிரஸ் உள்ளிட்ட பல விதமான ஆடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர், தற்போது மெல்லிய மஞ்சள் நிற டாப்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.