சீரியல் என்றாலே அனைவரது நினைவிருக்கும் முதலில் வருவது சன் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தவகையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பூவே உனக்காக. பூவே உனக்காக சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் ஜோவிதா லிவிங்ஸ்டன். அவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூவே உனக்காக சீரியலில் முதன் முதலாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திடீரென இதிலிருந்து விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கான தனது மேற்படிப்பு என்று கூறிய அவர் பின்பு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் பல சோகமான வார்த்தையினையும் பதிவிட்டுள்ளார். வைரம் எத்தனை அறுபட்டாலும், எத்தனை துயரம் பட்டாலும் எப்பொழுதுமே மின்னும் அதுபோன்று நான் என்று குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவர் நடித்த சீரியலில் எவரேனும் இவரை வேண்டுமென்றே வெளியே அனுப்பியுள்ளார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடைசியாக கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது போன்று காட்சி படமாக்கப்பட்டு இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் கடலில் விழுந்து செத்துட்டீங்களா என்று கேள்விஎழுப்பியுள்ளார்.
View this post on Instagram