கடந்த 2007 ஆம் ஆண்டு, நடிகர் விஜய் நடிப்பில் மற்றும் இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “போக்கிரி”. இந்த படம் நடிகர் விஜய்க்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். பட்டி தொட்டி எங்கும் செம்ம ரீச் ஆனது இந்த படம். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களை நாம் அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.
அந்த வகையில்இந்த படத்தில் நடித்த நடிகை தான் பிருந்தா பரீக்.
வி ல்ல ன் gang -ல் ஒருவரான ‘மோனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் தான் நடிகை பிருந்தா பரீக். அப்படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்று சொல்லலாம்.
இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் நடிகை பிருந்தா பரீக் அவர்கள். இந்நிலையில் தற்போது போக்கிரி படத்தில் நடித்த நடிகை பிருந்தா அவர்கள், தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.