மனிதர்கள் போலவே யோகா செய்யும் நாய்.. என்ன க்யூட்டா யோகா செய்யுது பாருங்க.. வைரலாகும் வீடியோ!

நாய் ஒன்று தன் எஜமானரைப் பார்த்து அவரைப் போலவே யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

   

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.

இங்கேயும் அப்படித்தான். இளம்பெண் ஒருவர் செல்லமாக தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்க்கிறார். அந்த நாய் வீட்டில் இளம்பெண் யோகா செய்வதைப் பார்த்துவிட்டு அவரைப் போலவே செய்கிறது. நாயும் தனக்கும் ஒரு மேட் எடுத்துக் கொள்கிறது. தொடர்ந்து தனது எஜமானி பெண் செய்வது போலவே செம க்யூட்டாக நாயும் யோகா செய்கிறது. குறித்த இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்.