மறைந்த நடிகர் முரளியின் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி பெங்களூரில் பிறந்தவர். இவரது அப்பா சித்தலிங்கய்யா ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். தமிழில் இவர் ‘பூவிலங்கு’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். எண்ணற்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார் முரளி.
1987இல் சோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர் .நடிகர் முரளியின் முதல் மகன் அதர்வா 2017 வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் முரளி தனது திருமணத்தில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இந்த காலத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கு டப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து இருக்கீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் …