முதல் படத்தில் நடிகை நயன்தாரா எப்படி இருக்கிறார் பாருங்க! துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியான புகைப்படம்..

தமிழ் திரை நடிகைகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா, எத்தனை நடிகைகள் திரைக்கு வந்தாலும் முதலிடம் தனக்கே என தன் அழகாலும், நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்.

   

அதன் பின்னர் சந்திரமுகி, யாரடி நீ மோஹினி, ராஜா ராணி போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆர் ஜெ பாலாஜியுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது. மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படம் படமாக்கட்பட்டு வருகிறது.

இவர் தனது திரை பயணத்தை முதன் முதலில் மலையலத்தில் நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான Manassinakkare எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பெயரை குறிப்பிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..