முதல் முதலாக தனது மனைவியை பெண்பார்க்க சென்ற போது கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்களேன்..!! ஆச்சிர்யத்தில் ரசிகர்கள் ..!!

கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு MS டிகிரிக்காக அமெரிக்காவிற்கு சென்றவர். தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.அவருடன் இணைந்து இவர், அவரது அண்ணன் நடித்த ஆயுத எழுத்து என்ற படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

   

கார்த்தி இயக்குனர் அமீரின் “பருத்திவீரன்” படத்தில் அறிமுகம் ஆனார். சூர்யா தனது தம்பியை முதல் படத்தில் அறிமுகப்படுத்தினார். “பருத்திவீரன்” முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது.முதல் படத்திலிருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அசாத்திய நடிகராக வளம் வந்தார் நடிகர் கார்த்தி . முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று திரை அரங்கில் நீண்ட நாள் ஓடிய சாதனையும் பெற்றது பருத்திவீரன் படம் ஆகும் .

அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற செல்வராகவனின் படத்தில் நடித்து அதிலும் வெற்றியை பெற்றவர். முதல் படத்தில் கிராமத்து கதை களத்தை தேர்ந்து எடுத்த கார்த்தி. இரண்டாவது படத்தில் வேறுமாதிரியான ஒரு கதை களத்தில் நடித்து சாதனை படைத்தார் . இன்றளவும் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் . அதனை விடவும் அந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர் பட்டாளாம் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும் .

தனது மூன்றாவது படமான லிங்குசாமியின் “பையா” படத்தில் சிட்டி இளைஞராகக் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்களை பூர்த்தி செய்யும் படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் கார்த்தி. அதன் பிறகு அவர் நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ்பாண்டியன் , பிரியாணி, தோழா, காற்று வெளியிடை, தேவ் அழகுராஜா போன்ற நகைச்சுவை கலந்த நவரச நடிப்பை வெளிபடுத்தும் பல படங்கள் நடித்தார் அதனை தொடர்ந்து அவருக்கு மக்கள் ஆதரவு மிகுதியாக கிடைத்தது .

இவர் நடித்து வெளியான சிறுத்தை, தோழா, போன்ற படகளுக்கு அளித்த ரசிகர்களின் ஆதரவால் இவர் வெற்றிக்கு வித்தாகும் அடுத்தடுத்த படங்களில் அவரது நடிப்பு திறமையை வெளி காட்டினார் . அதன் பிறகு சமீபத்தில் அவர் நடித்து வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று”, கடைக்குட்டி சிங்கம் “கைதி” போன்ற அப்படங்கள் இவருடைய மார்க்கெட்டை பெரிதாக்கி கொடுத்தது.தற்போது அவர் கதைகளுக்கு செவி சாய்த்து அதற்க்கு ஏற்ற நடிப்பும் வல்லமையும் தரும் கதைகளுக்கே நடிக்க விரும்புவார் என்று பரதரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

இவ்வாறு ரசிகர்கள் மனதை ஆட்கொண்ட நடிகர் கார்த்தி, அவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவரது மனைவி ரஞ்சனியை பார்த்து வெட்கப்படும் பழைய புகைப்படங்கள் சமுகவளைதலங்களை சுற்றி வருகின்றன அதனை பார்த்த ரசிகர்கள் மாப்பிளை வெட்கத்தை பாருங்களேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் . இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள் இதோ.