“முந்தானை முடிச்சி” படத்தில் நடித்த இந்த குழந்தை தற்போது பிரபலமான ஒரு நடிகை…. யார் தெரியுமா..?

கடந்த 1983 -ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் தான் “முந்தானை முடிச்சி”. இந்த படத்தில் நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார்.

   

மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு காய் குழந்தை ஒன்றை வைத்திருப்பார் நடிகர் பாக்யராஜ். அந்த குழந்தை தான் தற்போது சீரியல்களில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். அந்த குழந்தை தான் பிரபல சீரியல் நடிகை சுஜிதா தனுஷ் அவர்கள். பிரபல தொலைக்காட்சியில் “பாண்டியன் ஸ்டோர்” என்னும் சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார் இவர்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.நடிகை சுஜிதா. மேலும், பல திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.