‘மேகமோ அவள், மாயாப்பூ திரள்’.. இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள புகைப்பங்கள் உள்ளே..

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார் இளம் நடிகையான இந்துஜா ரவிச்சந்திரன்,. கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் “பிகில்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

   

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் “நானே வருவேன்” படத்தில் கதாநாயகி கூட இவர் தான்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகின்றனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதில் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் ட்ரெஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.