பிரபல தொலைக்காட்சியில் சென்சேஷனலான நிகழ்ச்சியாக இப்போது Mr & Mrs சின்னத்திரை 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் இந்த எபிசோடை மா.கா.பா ஆனந்த் மற்றும் ‘பிக்பாஸ்’ அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
இதில் பாடகர்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கணவன் மனைவியாக கலந்துகொண்டனர்.
குறிப்பாக தீபா அக்கா, சீரியல் நடிகை மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் யோகி தமது மனைவி மைனாவிடம் புரோபோஸ் செய்த நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது. அப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி அமர்ந்திருந்தனர்.
அதில் கோபிநாத் கூறும்போது சிவாஜி கணேசனுடன் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த பிரபல பழம் பெரும் நடிகர் ராமதாஸ் தான் யோகியின் (மைனாவின் கணவர்) தாத்தா என்பதை ரிவீல் செய்தார்.
அப்போது யோகி, “நான் என்னென்னவோ முயற்சி செய்தேன்.. திரைத்துறைக்கு வரும் யோசனையே இல்லை.
ஆனால் அப்போதெல்லாம் என் தாத்தா திரைத் துறையைச் சார்ந்தவர் என்பது எனக்கு தோன்றவே இல்லை. இப்போது திரைத்துறையில் வளரும் இந்த வேளையில் தாத்தா உடன் இல்லை என தோன்றுகிறது!” என்று எமோஷனலாக குறிப்பிட்டிருந்தார்.