‘ரோஜா’ சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்… பிறந்தது குழந்தை… என்ன குழந்தைனு தெரியுமா உங்களுக்கு?…குவியும் வாழ்த்துக்கள்…

‘ரோஜா’ சீரியல் வில்லி நடிகையான விஜே அக்ஷயாவிற்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் விஜே அக்ஷயா. இவர் அதற்கு பிறகு ‘ரோஜா’ சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. டிஆர்பியிலும் தொடர்ந்து முதலிடத்தில்  உள்ளது. இந்த சீரியலின் முதலில் ‘வில்லி அனு’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷாமிலி குமார் கர்ப்பமாக இருந்தால் சீரியலை விட்டு விலகினார்.

   

அவருக்கு பதில் தான் விஜே அக்ஷயா ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். ‘ரோஜா’ சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதற்கு ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம்.

இந்த சீரியலில் நடிகை பிரியங்கா ஹீரோயின் ஆகவும், சிப்பு சூரியன் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். தற்பொழுது அக்ஷயாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்துள்ளது. சமீபத்தில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது விஜே அக்ஷயாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சக நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு….