‘லவ் டுடே’ இவானாவா இது?…பள்ளியில் படிக்கும் பருவத்தில்  எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க… வீடியோ இதோ….

‘லவ் டுடே’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை இவானாவின் பள்ளி பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை இவானா. இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

   
Actress Ivana in Love Today Movie Images HD

இதை தொடர்ந்து தற்பொழுது ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டுகிறது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

இத்திரைப்படம் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி உள்ளார் நடிகை இவானா. இவருக்கு தற்பொழுது லவ் டுடே திரைப்படம் மூலமாக ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இவரின் நிஜ பெயர் அலீனா ஷாஜி. தற்போது இவருக்கு 22 வயது தான் ஆகிறது. இவானா தனது பள்ளியில் படிக்கும் பொழுது பேனர் ஒன்றில் இருக்கும் தனது போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….