விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல்! மீண்டும் சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய்க்கு தான் கடும் போட்டி நடக்கிறது. பல வருடங்களாக சன் டிவி தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என்றே கூறலாம்.

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய புதிய சீரியல்களை அவ்வப்போது ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆம் ‘ ராஜாபார்வை ‘ எனும் தலைப்பில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீரியலில் ரசிகர்கள் மனதை ஏற்கனவே கொள்ளைகொண்ட பிரபல நடிகை ராஷ்மி ஜெயராஜ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

நடிகை ராஷ்மி ஜெயராஜ் இதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..