பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது? முழு மேக்கப்பில் எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடிக்க, அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசப்படும் இந்த சீரியல் சென்ற வாரம் அணைத்து TRP ரேட்டிங்கை அடித்து நொறுக்கி முதலிடத்தை பிடித்தது. இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா.

விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரோஷினி, தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சமூக வலைத்தளத்தில் சேர்த்துள்ளார். அதே போல் தனது ரசிகர்களை கவர்வதற்கு அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ரோஷினி, தற்போது முழு மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..