விஜய் தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் டி டி. ஸ்மைல் கலகலப்பான பேச்சால் கவரப்பட்டு ரசிகர்கள் இவரை டிடி என்று அழைப்பார்கள். இவர் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாலநியாக பணிபுரிந்து வருகிறார் டிடி. விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வளம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்ச்சி டி.ஆர்.பில் வேற லெவல் பிடித்து வருகிறது.இவற்றில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்1, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரோடு திருமணம் ஆனது ஆனால் இவர்களுக்கு இடையில் கருது வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் , சமீபத்தில் டிடி கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ,ஆனால் அந்த புகைப்படம் இயக்குனர் சுந்தர்.சி திரைப்படத்தின் காட்சிகள் என்று தற்போது தெரியவந்துள்ளது .,