நாய் ஒன்று சுவற்றின் மீது ஏற முயற்சி செய்து தோற்ற போதிலும் விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் முயற்சித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. வெற்றி என்பது சுலபத்தில் யாருக்கும் கிடைத்து விடுவது கிடையாது. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். முயற்சி செய்து அதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் நினைத்த இலக்கை நம்மால் எட்ட முடியும் .
முதற்கட்ட முயற்சிகள் நமக்கு தோல்விகளை தழுவினாலும், அந்த முயற்சிகளினால் கிடைத்த பயிற்சி காரணமாக ஒரு நாள் வெற்றி கிடைப்பது என்பது உறுதி. முயற்சி செய்யாமலேயே சோம்பேறித்தனமாக இருந்தால் தோல்வியும் வறுமையும் வாசலில் வந்து நிற்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இணையத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு நாய் ஒரு காம்பவுண்ட் சுவரை தாண்டுவதற்கு முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றது. முதலில் காம்பவுண்டை பற்றி கொள்வதற்கு எம்பி எம்பி குதிக்கின்றது. ஆனால் முடியவில்லை. இதனால் நாய் ஒன்றும் துவண்டு போகவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து அதனை செய்து கொண்டே உள்ளது. கடைசியில் அந்த நாய்க்கு வெற்றி கிடைத்து விட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்து பலரும் ஒரு முறை தோல்வியை சந்தித்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்களும் பாருங்கள்…