“கணவனே கண்கண்ட தெய்வம்” என்று தமிழ் கலாச்சாரம் கூறுகின்றது அதற்கு ஏற்றாவாறு தமிழ் பெண்கள் கணவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு எதுவும் இணையாகாது.
அந்த காலத்தில் கல்யாண மேடையில் தான் பெண்கள் முழுமையாக தனக்கு கணவராக வருபவரை பார்ப்பார்கள் அந்த அவளுக்கு நம் கலாச்சாரம் இருந்தது நாளடைவில் பெண் பார்க்கும் நேரத்தில் முகம் பார்த்து இருவரும் தனியாக பேச அரமித்தார்கள், பின்னர் டேட்டிங் என்று ஒரு புது வழியை அறிமுகம் படுத்தினார்கள்.
ஆனாலும் தமிழ்ப் பெண்களுக்கு கணவர் மீது பாசம் அதிகம் இந்த விடியோவிலும் அப்படிதான் கணவர் வேலைக்காக வெளி நாட்டிற்கு செல்கிறார் அவரை வழி அனுப்ப குடும்பத்தோடு எல்லோரும் விமானநிலையத்திற்கு சென்றனர்.
ஆனால் அவரால் மற்றவர்கள் போல் சகஜமாக இருக்க முடியவில்லை அவர்கள் பிரிவை நினைத்து கண்ணீர் விடுகிறார் அதைப் பார்த்த கணவரும் அழுகின்றார். விமான நிலையத்தில் அவர்கள் நின்ற பகுதியே சோகத்தில் மூழ்கியது.
இதே போலத்தான் பல பெண்களும் வெளி நாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள் என்னதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் நேரில் பார்த்து பேசுவது போல இருக்காது, அதுவே அவர்களுக்கு மன அழுத்தமாக இருக்கும். இந்த விடியோவை பாருங்கள் உங்கள் வாழ்விலும் கூட இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்.