விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5!! போட்டியாளர்கள் யார் யாரு தெரியுமா? வெளியான லிஸ்ட்

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதே போல் பிக் பாஸ் சீசன் 4 போல் இல்லாமல், கொஞ்சம் விறுவிறுப்பும், கொஞ்சம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

   

தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், பிக்பாஸ் சீசன் 5 வேலைகள் தொடங்கி உள்ள நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்த லிஸ்ட்டில் ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோரும் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. இவர்களில் யார் யார் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.