வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற நபர்! கணவன்- மனைவி சேர்ந்து செய்த செயல்!!

தமிழகத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது.

சென்னையை ஒட்டிய பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 28), கடந்த 2ம் தேதி துரையின் தாய் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

வீட்டின் சாவியை பக்கத்தில் இருந்த நந்தினி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இறுதிகாரியங்கள் முடிந்தபின்னர், சென்னை திரும்பிய துரை பீரோவை திறந்த போது அ.தி.ர்ச்சி காத்திருந்தது.

பீரோவில் வைத்திருந்த சுமார், 84 ஆயிரம் ரூபாய் பணம் 3 1/4 சவர தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து சங்கர்நகர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார் துரை, தொடர்ந்து அதிகாரிகள் நந்தினியிடம் விசாரணை நடத்தியதில் தான் திருடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் தெளிவான முடிவு எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் துரை தான் அளித்த புகாரில், எப்பொழுதும் பணத்தை எண்ணி பணத்தின் முதல் தாளில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று எழுதி கையெழுத்தை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோல் 84 ஆயிரம் ரூபாய் பணத்தின் முதல் தாளிலும் எவ்வளவு பணம் இருக்கின்றது குறிப்பிட்டு கையெழுத்து போட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த இடத்தில் நந்தினியின் கணவர் உமா சங்கர் சிக்கிக் கொண்டார். அவர் அளித்த பணத்தில், சுமார் 4,500 ரூபாய் என எழுதப்பட்டு துரையின் கையெழுத்து இருந்துள்ளது.

தகவல் அறிந்த போலீசார் கைது செய்து விசாரித்ததில், நந்தினி மற்றும் உமா சங்கர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களது வீட்டில் இருந்து, 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 வெள்ளி கொலுசு, 3 1/4 சவரன் தங்க நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *