வேடிக்கை பார்த்த பெண்ணிற்கு திடிரென தாலி கட்டிய இளைஞர்…! யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அரங்கேறிய சம்பவம்… வைரல் வீடியோ

திருமணத்திற்கு வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணின் கழுத்தில் பின்னே நின்ற இளைஞர் ஒருவர் தாலி கட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளதாக தெரிகின்றது. ஆனால் குறித்த பெண்ணின் சம்மதம் உண்டா? எந்த இடத்தில் இவ்வாறு நடந்தது? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

   

திருமணம் என்றால் உறவினர்கள் சூழ ஐயர் தாலி எடுத்துக்கொடுக்க, மேளம் கொட்ட என சிறப்பாக நடைபெறும். ஆனால் குறித்த இளைஞரோ எந்தவொரு செலவும் இல்லாமல் சுலபமாக தனது திருமணத்தினை நடத்தியுள்ளார்.

குறித்த காட்சியில் பெண்ணின் இருக்கைக்கு பின்னே சாதாரணமாக நின்ற இளைஞர் ஒருவர், மணமக்கள் கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டும் தருணத்தில் தனது பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்து முன்னே இருந்த பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். குறித்த சம்பவத்தினை இளைஞரின் நண்பர்கள் காணொளியாக எடுத்துள்ளனர்.