விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் 10 ஆண் போட்டியாளர்கள், பத்து பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என்று 21 பேர் களமிறங்கிய நிலையில் தற்போது ஐந்து பேர் எலிமினேட் ஆகி மீதம் 16 பேர் விளையாடி வருகிறார்கள்.
இதில் மக்களின் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தனலட்சுமி. இவர் வீட்டிற்கு சென்ற நாள் முதலே தொடர்ந்து பலரிடம் திட்டு வாங்கி வருகிறார். கமலஹாசன் அவர்களிடமே கடந்த வாரம் அவர் திட்டு வாங்கி இருந்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .
அது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வெளியேயும் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் தான் அதிக அளவில் உள்ளது. எனவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தனலட்சுமி டிக் டாக் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது . இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…