சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி இளம் நடிகைகளாக பிரபலமாவது இயல்பான ஒன்று. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
விஸ்வாசம் படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார். தற்போது, மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். 16 வயதிலேயே முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பிரபலமாகி வருகிறார் நடிகை அனிகா.
இதற்கு காரணம் அவர் இணையத்தில் வெளியிட்ட போட்டோஹுட் புகைப்படங்கள் தான். சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் 16 வயதா ஆகிறது என்று ரசிகர்கள் ஷாக்காகி கேட்க்கும் அளவிற்கு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..