அடக்கடவுளே இவ்வளவு போராட்டமா…! நடிகர் பார்த்திபன் பற்றி யாரும் அறியாத 10 தகவல்கள்…. இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இவர் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தின் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். இந்த படத்தில் இவரை நடித்து இவரை இயக்கி ஒரே கதாபாத்திரம் படம் முழுவதும் பார்த்திபன் இதுதான் இவருக்கான வெற்றி. இவர் ராதாகிருஷ்ணன் -பத்மினி தம்பதிகளுக்கு மகனாக 1957 ஆம் வருடம் நவம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.

   

இவருடைய இயற்பெயர் என்னவென்றால் மூர்த்தி. சினிமாவிற்கு வந்த பிறகுதான் பார்த்திபன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

இவர் சிறுவயதில் கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். அதன் பிறகு இந்து பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

பின்னர் கல்லூரியில் சேர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் அவருடைய தாயார் தன்னுடைய தாலியில் உள்ள குண்டுமணி ஒன்றை அடகு வைத்து தான் கல்லூரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

இவருடைய தந்தை தபால் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். அவருக்கு குறைந்த சம்பளம் என்பதால் குடும்பத்தில் கஷ்டம்.

இதனால் சென்னைக்கு வந்த பார்த்திபன் சொந்தக்காரர் ஒருவரின் வீடு ஒன்றில் தங்கி சினிமாவில் என்னை சேர்த்து விடுங்கள் என்று கெஞ்சி உள்ளார். அதன் பிறகு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக முயற்சி செய்தாராம்.

இதனையடுத்து பார்த்திபன் நாடக கம்பெனியில் சேர்ந்தால் சிவாஜி கணேசன் போல நல்ல நடிகராக ஆகலாம் என்ற நினைப்போடு எஸ் பி ராமதாஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து கொஞ்ச காலம் நடிப்பதற்கும் கற்றுக் கொண்டார்.

ஆனால் அவர் கூட இருந்தவர்களோ உன்னுடைய முகத்திற்கு ஹீரோவாக நடிக்க முடியாது கலராக, அழகாக இருந்தால் மட்டுமே ஹீரோவாக முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனால் மனம் வருந்திய பார்த்திபன் தன்னால் நடிகராக முடியாது என்ற நினைப்பில் தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் டிஎஃப்டெக் படித்து முடித்துள்ளார்.

அதன் பிறகு உதவி இயக்குனராக பணிபுரிய நினைத்த இவர் அதற்கு தன்னிடம் நிறைய தகுதி இருக்க வேண்டும் என்று நினைத்ததால் கொஞ்ச காலம் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவே பணிபுரிந்தார்.

அதன் பிறகு ஒரு தலை ராகம் படத்தில் ஹீரோவிற்கு டப்பிங் செய்தார். பார்த்திபன் இவ்வாறு டப்பிங் செய்து மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றார்.

அதன் பிறகு உதவி இயக்குனராக வேலைக்கு சேர நினைத்த இவர் பாரதி என்ற கதையை எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் அவர் எழுதிய சந்தோஷ ராகங்கள் என்ற கதையை இயக்குனர் பாக்கியராஜ் இடம் சொல்லி உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அவருக்கு மாதம் 300 ரூபாய் தான் சம்பளம் என்று கூறப்பட்டது.

ஆனால் அதையும் ஒத்துக் கொண்டார் பார்த்திபன். தாவணி கனவுகள் என்ற படத்தில் பார்த்திபன் தன் அப்பாவை போல தபால்காரராக நடித்தார். பாக்யராஜிடம் தன்னுடைய அப்பாவும் ஒரு தபால்காரர் தான் என்று சொல்ல அவரும் நீ அந்த கதாபாத்திரத்தில் நடி என்று சொன்னாராம்.

அதன் பிறகு பாக்யராஜ் சிறிது காலம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இயக்குனராக மாறிவிட்டார். புதிய பாதை என்ற படத்திற்கு நடிகை சீதாவை நடிக்க வைக்க சீதாவின் அப்பாவிடம் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அப்போது நடிக்க மறுத்த சீதா பின்னர் சிறிது நாட்களில் நடிகர் பார்த்திபனையே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.