அட.. நம்ம ரியோ ராஜ் பொண்ணா இது?… இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர் ரியோ ராஜ்  மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ்.  இவர் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இதைத்தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் சீசன் 3ல்  நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இத்தொடரில் தனது  திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது சினிமாவிலும் அவர் ஹீரோவாக நுழைந்துள்ளார். இவர் நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் ரியோ ராஜ் 2017ல் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான மகள் உள்ளார். அந்த குழந்தையின் பெயர் ரித்தி. தற்பொழுது நடிகர் ரியோ ராஜ் மகளின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அட நம்ம ரியோ ராஜோட மகளா இது? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.