நடிகை பூமிகாவின் மகனை பார்த்திருக்கீங்களா?… உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்  இருக்காங்களா?…வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…

நடிகை பூமிகா தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபுதேவா உடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

   

இவர் நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலியாக கலக்கி இருப்பார். இத்திரைப்படத்தில் வரும்’ முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது. தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் அதிகமான குணச்சித்திர வேடங்களில் பூமிகா நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘சீதா ராமம்’  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 2007ல் தனது யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014ல் ‘யாஸ்’ என்ற மகன் பிறந்தார்.

தற்பொழுது அவருடைய மகனுக்கு எட்டு வயதாகும் நிலையில் நடிகை பூமிகா தனது அழகான குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘அட நம்ம பூமிகாவோட மகனா இது? உங்களுக்கு இவ்ளோ பெரிய மகன்  இருக்காங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.