உருவாகப் போகும் சண்டை… காத்திருக்கும் போட்டியாளர்கள்…. பரபரப்பாக வெளியான ப்ரோமோ இதோ….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்பொழுது 11 போட்டியாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. இறுதியாக இந்நிகழ்ச்சியில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி உள்ளனர். இதைப் பொறுத்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

தற்பொழுது இந்த வாரம் மணிகண்டன் தான் குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து பிக் பாஸ் டைட்டில் யார் பெறுவார் என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் நரகம், சொர்க்கம் என இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். நரகத்தில் அதிக நேரம் பெடலிங் செய்தவர் சொர்க்கத்திற்கும், சொர்க்கவாசிகள் கலந்து பேசி அவர்களில் ஒருவரை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த டாஸ்கின் மூலம் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் மிகப்பெரிய சண்டை வெடிக்க உள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக போர் அடிக்காமல் இருக்கும் என ரசிகர்கள் காத்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ….