
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் ஆரம்பத்தில் சோனா மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ஸ்டார் விஜய்யின் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
அந்த சீரியல் மூலம் கிடைத்த வெற்றியின் காரணமாக இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், அசுரன், யானை, குருதியாட்டம் , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன், 10 தலை, பொம்மை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் விஷால் 34 என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் உருவாகும் ‘பீமா’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாகியுள்ளார்.இந்நிலையில் சமீர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர். நான் ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்யப் போன இடத்தில் ஒரு பையன் ஒரு வருஷமா சைட் அடித்தேன் ஆனால் நான் அவருடன் பேசவில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் அவ்வளவுதான் அதன் பிறகு நான் வேற ஜிமெயில் சேர்ந்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.