
முன்னணி நடிகையான சௌந்தர்யா நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சௌந்தர்யா நடித்த தவசி, சொக்கத்தங்கம், அருணாச்சலம், சேனாதிபதி, காதலா காதலா, இவன், படையப்பா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். கடந்த 2004-ஆம் ஆண்டு சௌந்தர்யா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டார். இதனையடுத்து தனது கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா விமானத்தில் சென்றார். அப்போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் வெடித்து சிதறி சௌந்தர்யா உயிரிழந்தார்.
அவர் இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக இருந்த சௌந்தர்யா தனது சொத்து குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்ததாக தெரிகிறது. அது பற்றிய தகவல் வெளி வரவே இல்லை. சௌந்தர்யா 31 வயதில் உயிரிழந்த நிலையில் முன்னதாகவே ஒரு உயிலை எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என சௌந்தர்யாவின் தாயும் கணவரும் கூறிவந்தனர்.
தற்போது மீண்டும் சௌந்தர்யாவின் 100 கோடி உயிர் பேசு பொருளாக மாறி இருக்கிறது. சௌந்தர்யாவின் அம்மாவும் கணவரும் அவர் உயிர் எழுதியதை மறைத்து சொத்துக்களை பாதி பாதியாக பங்கு போட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.