1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை

இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் யவ்னே நகரில் நடந்த அகழ்வாய்வின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை எடுத்துள்ளனர்.

   

இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும் சேதம் அடையாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முட்டையின் ஓட்டை வைத்து அது 1000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து முட்டையுடன் பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.