36 வயதிலும் பிட்டாக இருக்கும் ‘தீபாவளி’ பட நடிகை…. எப்படித்தான் இவ்வளவு அழகா இருக்கீங்க?… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்….

நடிகை பாவனா சிம்பிளான சல்வார் ஒன்றில் மிகவும் பிட் ஆக இருக்கும் தனது புகைப்படத்தை தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதை தொடர்ந்து வெயில், தீபாவளி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா மலையாளத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளாகி மனமடைந்து சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார்.

   

இவர் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார். இவர் நடிப்பையும் தாண்டி இவரின் சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை. இவர் 2018ல் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான ‘நவீன்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிடுவார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் சிம்பிளான சல்வார் ஒன்றை அணிந்து புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ’36 வயசுலயும் இவ்வளவு பிட்டா இருக்கின்றீர்களே?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.