4 வயது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு : கடைசியாக தம்பியிடம் கதறிய பரிதாபம்!!

தமிழகத்தில் 4 வயது குழந்தைக்கு தாய் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு ராஜன் என்ற 35 வயது மகன் உள்ளார். கொத்தனாரான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

   

இதையடுத்து இந்த தம்பதிக்கு நித்திலேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில் ராஜனுக்கு ராமநத்தத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதை அறிந்த முத்துலட்சுமி கணவரிடம் இந்த பழக்கத்தை விட்டுவிடும் படி கூறியுள்ளார். ஆனால், ராஜன் கேட்காமல், தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசுவதும், பழகுவதுமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்குமே கடந்த 7 மாதங்களாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி கடந்த 21-ஆம் திகதி இரவு இவர்களுக்கிடையே மீண்டும் இந்த பிரச்சனை உருவெடுக்க, முத்துலட்சுமி மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் விஷம் குடித்த அவர், அதன் பின்னர் அதை தனது 4 வயது குழந்தைக்கும் கொடுத்துள்ளார். தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத அந்த குழந்தையும் அதை குடித்துள்ளது.

பின்னர் முத்துலட்சுமி, தனது தம்பி சண்முகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் நடந்த பிரச்சினை குறித்தும், குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், இருவரும் பரிதாபமாக உ.யிரிழந்தனர்.

இது குறித்து முத்துலட்சுமியின் தந்தை முருகேசன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.