58 வருடமாக திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா !! பின்னணியில் இப்படி ஒரு காரணமா ?? அ தி ர்ச்சியாகிடுவீங்க !!!

தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பின், முன்னணி குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாவும் இருப்பவர் நடிகை கோவை சரளா. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்து வரும், நடிகை கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் கலக்கி வரும் கோவைசரளா, 58 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அதாவது கோவை சரளாதான் அவரது வீட்டிற்கு மூத்த மகளாம். அவருக்கு கீழ் நான்கு சகோதரிகள் ஒரு சகோதரர். நடிகை கோவை சரளா, தனக்கு கீழ் பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்துள்ளார். அதோடு அவரது பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து சகலத்தையும் கோவைசரளா தான் பார்த்து வருகிறார்.

அதோடு ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களுக்கும் அவர்தான் உதவி செய்து வருகிறார். தன் வாழ்நாள் முழுக்க அடுத்தவருக்கு உதவி செய்வதுதான் நோக்கமாக கொண்டுள்ளதால், திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கவலை தனக்கு இருந்ததே இல்லை என்று கோவை சரளா கூறியுள்ளார்.

தன் உடன் பிறந்தவர்களுக்காக தான் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து அவர்களின் குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளை போல் பாவித்து வரும் கோவை சரளாவை ரசிகர்கள் மனதில் தன்னுடைய நடிப்பை விடவும் ஒரு படி உயர்ந்து விட்டார் என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *