80ஸ்-களில் தமிழ் சினிமாவில் கலக்கிய பிரபல நடிகை…. இவருடைய மகளா இது..? புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் 80-ஸ் 90- ஸ் நடித்து பெயர் பெற்ற குணச்சித்திர நடிகை தான் வனிதா கிருஷ்ணச்சந்திரன். இவர் 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் அவர் நடித்து வருகிறார்.

   

கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான பாதை மாறினால் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இவர் 1986 ஆம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ண சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற மகள் உள்ளார். தற்போது 30 வயதாகும் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் வனிதா படப்பிடிப்புக்காக அவ்வபோது சென்னை வந்து செல்கிறார்.