
துபாயில் துருக்கியை சேர்ந்த ஒரு நபர் நடத்தி வரும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஒரு நபர், தன் நண்பர்கள் குழுவுடன் சென்று சாப்பிட்டுள்ளார். அவருக்கு வந்த பில் தொகை சுமார் 90 லட்சம் ரூபாய். இதனை, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தன் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பில்லின் புகைப்படத்தை வெளியிட்டு, பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த பில்லை பார்க்கும் போது, விலை உயர்ந்த உணவுகள் மட்டும் அல்லாமல், அதிக விலை கொண்ட குளிர்பானங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்த பலரும் அன்றாட உணவிற்கே வழியில்லாமல் பலர் இருக்கும் போது ஒரு வேளை சாப்பாட்டிற்கு 90 லட்சம் செலவு செய்வதா? என்று விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலரோ இருக்கிறவர்கள் அவர்கள் இஷ்டம் போல செலவு செய்கிறார்கள் நமக்கு என்ன? என்று கூறி வருகிறார்கள்.