மறைத்த பிரபல நடிகை ஸ்ரீ வித்யாவின் பலரும் பார்த்திடாத சில புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் தந்தை நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி தாய் எம் எல் வசந்தகுமாரி  ஒரு கர்நாடக இசை பாடகி .

   

இவருக்கு சங்கர ராமன் என்ற ஒரு சகோதரரும் உள்ளார்.இவர் தந்தைக்கு உடல்நிலை குறைவால் நடிப்பை நிறுத்திவிட்டார். இவரது குடும்பம் நிதி நெருக்கடியில்  இருந்தது. குடும்பத்தின் செலவுகளை பார்த்துக் கொள்ள இவர் தாய் நீண்ட நேரம் உழைத்து குடும்பத்தை கவனித்து வந்தார் .

 

அதனால் ஸ்ரீவித்யா மிகச் சிறிய வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து இவர் ஒரு சில குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். 1972 ஆம் ஆண்டு வெளியான ‘டில்லி டு மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் வெள்ளிவிழா, செல்வந்தன், நினைக்கிறேன் ,அபூர்வராகங்கள், திருக்கல்யாணம், அன்பே மலரே, தளப,தி லண்டன் ,ஆனந்தம் போன்ற பல தமிழ் படங்களில்  நடித்துள்ளார். நடிகை ஸ்ரீவித்யா நடிகை மட்டுமல்ல ஒரு பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர்  800-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் 40 ஆண்டு காலம் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். நடிகை ஸ்ரீவித்யா மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை  காதலித்து 1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த திருமண வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளை நீடித்தனர். இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 1980 விவாகரத்து பெற்றனர்.இவர் முதுகு எலும்பு புற்றுநோய் காரணமாக மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார் .அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி  உடல்நிலை குறைவால்  காலமானார். தற்போது இவரின் பலரும் பார்த்திடாத  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.