
பிரபல நடிகரான தனுஷும் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து இருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தனுஷ் ஐஸ்வர்யாவும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமா? பிரிய வேண்டுமா? அல்லது அவர்களுக்காக வாழ வேண்டுமா என்பவற்றை ஆராய்ந்து செய்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
பெரிய குடும்பத்தில் பெண் எடுக்கும் போது அந்த குடும்பத்திற்கு மருமகன் அடிமையாக தான் இருக்க வேண்டிய கட்டாயம். தனுஷ் குடும்பத்திற்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் சரியான மரியாதை கொடுக்கவில்லை. நல்ல முறையில் நடத்தவும் இல்லை. அவர்களுக்கிடையே ஜாதி இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. கபாலி, காலா ஆகிய திரைப்படங்களில் ரஜினி நடித்த போதும் அவர் அப்படி இருப்பாரா என கேள்வி கேட்கலாம். ஆனால் அந்த படங்கள் இயக்குனரின் பார்வை தான். ரஜினி தனது வீட்டில் பெரிதாக ஜாதியை பார்க்கவில்லை.
ஆனால் ஒரு வித இடைவெளி இருக்கிறது அவர் இருக்கும். அவர் வீட்டிலேயே யார் யார் எந்தெந்த ரூமுக்குள் செல்ல வேண்டும் என்பது குறித்த கட்டுப்பாடுகள் உள்ளது. அவ்வளவு எளிதாக நீங்கள் எல்லா ரூமுக்குள்ளயும் போக முடியாது. தனுஷின் அண்ணன் செல்வராகவன் சோனியா அகர்வாலை பிரிந்து இருந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். இதேபோல விவாகரத்து பெற்றால் தனுஷுக்கும் அவரது பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து வைப்பார்கள் என அவர் பேசியுள்ளார்.