நடிகர் பரத்தின் திருமண புகைப்படங்கள்… பார்த்துள்ளீர்களா…இணையதில் வெளியான புகைப்படம் இதோ….

தமிழ் திரைப்பட  நடிகர்களில் ஒருவர் தான் பரத் . திருச்சியை சார்ந்தவர். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ப்ரீத்தி.  இவர் 2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ என்ற படத்தின்  மூலமாக தமிழ் திரை உலகில்   அறிமுகமானார்.

   

இவர் டான்சிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார் ஒரு சர்வதேச நடனப்பள்ளியில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டார்.

திருமுருகன் இயக்கத்தில் வெளியான ‘எம்டன் மகன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக  அனைவரத்து  கவனத்தையும்  தன் பக்கம் ஈர்த்தார்.

இப்படமானது அவருக்கு மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைத்தது.

இதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் திரைப்படங்களாக வெளியாகி உள்ளது.

தமிழில் இவர் செல்லமே ,காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சைபர்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் நடித்த படத்தில் முக்கியமான திரைப்படம் ‘ காதல்’இப்படம்  மக்கள் இடையே மிகச் சிறந்த விமர்சனங்கள் மற்றும் பிளாக் பஸ்டர் வெற்றியும் தந்தது.

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 555 என்ற படத்தில் படத்தில் தனது சீக்ஸ் பேக் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்  பரத்.

சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியைத்  தவறி வருகிறது. இதனால் பெரிய வெற்றி திரைப்படத்திற்காக காத்துள்ளார்.

சமீப காலத்தில் வெளியான ‘காளிதாஸ்’ என்ற படம்  நல்ல விமர்சனத்தையும் , மக்களிடையே வரவேற்பும் இடம்பெற்றது .

இவர் சிறு வயது தோழி ஜெஸ்லி ஜோஸ்வா என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது.இவரின் திருமண  புகைப்படம் இணையத்தில்  வெளியாகி உள்ளது .